விடியல் காணுமோ வளரும் தலைமுறை

பக்குவபடுத்தும் பெடிக்குள்ளே
பத்தொரு மாதத்து தங்கமொன்னு
பாரினை பார்க்க காத்திருக்கும்..

வாழ்க்கை திட்டம் வகுத்தறியா மூடர்கள்
இங்கு பெற்றோர்களாக பத்திரபடுத்தும்
வைரங்கள் கூட வீதிக்குவரும்..

உண்டிடும் உணவும் காணாத்தூரமிருக்க
கொஞ்சிடும் கைகள் கெஞ்சிடுமே
கால்வாயிற்று கஞ்சிக்காக...

கோடியில் புரண்டும் சுயநலம் மனதில்
குப்பையாய் இருக்க சிலரின் லாபத்தின்
நோக்கம் சிறுவர்களை இன்றும் வதைக்கிறதே..

அறுசுவையும் கனவில்கண்டு ஆசைவந்தும்
பள்ளி குழந்தை பார்த்துதினம் ஏக்கம்கொண்டும்
பஞ்சம் மட்டும் தஞ்சமாக ஏமாறுதே சிறுஉள்ளம்..

பசிவருத்தும் இவர்களின் உணர்வைகொன்று
உழைப்பை உறிஞ்சும் முதலாளித்துவ
திருடர்கள் மட்டும் செழிப்பாகின்றனர் என்றும்..

ஒரு குழந்தையின் கல்வி வளமதை
சிறப்பென கண்டிராத செல்வந்தனின்
புண்ணிய தேடல்பலன் என்றும் பாவமே..

பிஞ்சு குழந்தை நொந்துபோகையில்
இலாபகணக்கை மனதில் கொண்டு வேலை
வாங்கும் நெஞ்சின் ஈரம் காய்ந்துபோனதோ..

தன்உடமை தான் காக்க உழைப்பதை விட்டுவிட்டு
பச்சிளங்கள் இரத்தம் உறிஞ்சி காசாக்கும் கயவனை
உள்ளுணர்வும் தட்டி தினம் கேட்பதில்லையோ...

உதவி செய்ய விரும்பாதிருந்தாலும் வளரும்
தலைமுறையை வேலைக்கு இழுத்து கல்வி
முடமாக்கி அறியாமை சிறை தள்ளிவிடாதே...

கட்டாயக்கல்வி என்றுரைத்தும் அதுஎட்டிசேரா
ஏழை குழந்தைகள் இன்றும் இரத்தத்தை
வியர்வையாக்கி உழைப்பதுண்டு...

மனிதா வளமுடன் குழந்தைகள் அறிவால்வளர
பலவித திட்டங்கள் வகுத்திட வரைமுறை
கற்ற பின்னே வாழ்க்கையில் சந்ததி பெற்றிடு...

ஏழை வாழ்வில் செழிப்புவர
விடியும் பொழுதும் எழுச்சி பெறும்
குழந்தை தொழிலாளர் கொடுமையும் தீரும்..!!

.......கவிபாரதி.......

எழுதியவர் : கவிபாரதி (29-Apr-14, 12:28 am)
பார்வை : 136

மேலே