கண்மணியே, உன்னை எங்கே தேடுவேன்

கண்மணியே, உன்னை எங்கே தேடுவேன்?

கடல் நீரில் நனைத்த கால்களும், கடற் மண்ணில் அமர்ந்த நாட்களும்,
கை கோர்த்து நடந்த இடங்களும் மறக்கவில்லையடி
உன் கண் பார்த்து நின்ற நேரமும், நீ மண் பார்த்து வரைந்த கோலமும்,
நம் மனம் சேர்ந்து வந்த காதலும் மறக்கவில்லையடி
படம் பார்த்து எழுதிய கவிதையும், இடம் பார்த்து வாங்கிய மலர்களும்,
உன் தடம் பார்த்து தொடர்ந்த இடங்களும் மறக்கவில்லையடி
கடன் கேட்டு சேர்த்த பொருளையும், உன் உடன் சேர்ந்து கழித்த பொழுதையும், நம் மனம் போல் வாழ்ந்த வாழ்க்கையும் மறக்கவில்லையடி
கண்மணியே, உன்னை எங்கே தேடுவேன்?

-சீ.ப

எழுதியவர் : சீ. பஞ்சாபகேசன் (29-Apr-14, 12:18 am)
சேர்த்தது : panchapakesan
பார்வை : 173

மேலே