கணவன் சமயலறையில்

கலி விருத்தம் ..

கணவன் சமயலறையில் ..

புன்னகை புரிந்து அம்மணி அருகில்
அன்னார் வரவும் அம்மணி அவரிடம்
பரணியில் இருந்து புளியை கொடுத்து
கரைத்து நீரில் தரும்படி பணித்தாள்

நீரில் புளியை நீண்ட நேரம்
கரைத்த அன்னார் கொடுத்து அதனை
கைவிரல் ஒன்றை நாவில் வைத்து
சப்பிப் பார்த்தார் இனிக்கும் என்று

நெற்றி வியர்வை துளிகள் அதனுள்
வீழ்ந்ததை அம்மணி காண வில்லை
சமையல் முடிந்து உண்ணும் வேளை
உப்பு எப்படி கூடிய தென்றாள்

எழுதியவர் : (30-Apr-14, 8:52 am)
பார்வை : 68

மேலே