அரூபி 0தாரகை0

தீண்டாமை பேதைமை
எனைக்கண்டு
தெறித்து ஓடும்
இல்லாமை கல்லாமை
இயலாமையில்
இதயம் வாடும்

அரச கீரிடமும்
அழுக்கு மேடையும்
ஒன்றாய் படும்
எனது கண்களுக்கு
பார்வை இல்லையென்ற
குற்றச்சாட்டும்
சமுதாயத்தில் உண்டு!

இளமை முளைத்து
கிளைத்து திளைக்கின்ற
பருவத்திலே நான்
வாசம் செய்பவள்

நான் மகிழ்ந்தால்
இதயம் உணர்வுச்சிறகெடுத்து
பறவையாய் வலம் வரும்
மலர்கள் மொழியின் தேவையின்றி
கவிதைகள் பாடும்

நான் கோபமுற்றால்
தீயும் திணறும் !
காற்றும் கணக்கும் !
அக்னியும் அஞ்சும் !

இறைவனின் இரு அதிசயங்கள்
இணைந்து பிணைந்து
பல்லாயிரக்கணக்கான
பேரதிசயங்களை
பெற்றேடுக்கவுதவும்
சூத்திர தாரி நான் !

கவிதையில் தவழ்ந்து
கதையில் நடந்து
காவியத்தில் எழுந்து நிற்கும்
சரித்திர சாகசங்களின்
உயிர்த்தலைப்பு நான்!

உள்ளங்களே என் குடியிருப்பு
அதை ஒட்டுவதே எம் பணி
பெற்றோரின் பழைய நண்பனாய்
பிள்ளைகளின் இன்றைய நண்பனாய்
உலகம் சுற்றும் வரை
மானிடம் உள்ளவரை
மரணமின்றி என் உயிர் துடிப்பு!

நான் இல்லாத இதயமில்லை
நான் இல்லையென்றால் அது இதயமேயில்லை
எனக்கென்று உருவமில்லை
நான் ஒரு அரூபி!

எழுதியவர் : தாரகை (30-Apr-14, 6:54 pm)
பார்வை : 166

மேலே