தாயின் கருவறை
பல கோடி கொடுத்தாலும்
மீண்டும் கிடைக்கா அரியாசணம்.,
பல போரில் வென்றாலும்
அடைய முடியா சிம்மாசணம்...
உலகை நோக்க என்னை.,
உயிராய் கூர் தீட்டிய பட்டறை...
விதையாய் விழுந்தவனை
விருட்சமாய் ஆக்கிய கருவூலம்...
உயிர் குருதியை மையாக்கி
என்னை உயி ரோவியமாக்கிய
உட லோவியம் ..அது ,
மீண்டும் அமர முடியா பூஞ்சோலை
என் தாயின் கருவறை....
மீண்டு வந்து அமர்வேன் அம்மா
கடவுளிடம் உன் புகழ் பாடி
கடவுளே.....
உயிரற்ற கல்லாய் உன்னை
சுமக்கும் கோயில் கருவறையில்
நீ அமரும் போது.....
உயிர் அளித்து உன்னை வணங்கச்
செய்த என் தாய் கருவறையில்
நான் அமர்வது தவறோ???
மீண்டும் அமர்வேன் தாயே ,
உன்னை உதைத்து விளையாட.,
என் உயிர் கல்லறை கண்டவுடன்...
சு.பரதன்