நிரந்தரம் இல்லை

விதியின் கையில்
நானுமொரு விலை மாது
நிரந்தர ஓருறவு தேடி
அலையும் என் உயிர் கூடு
தினமொரு புது
உறவு கூடி
கரையும் காலத்தின்
வெறுங்கூடு
கரு தந்தவள்
காலன் கையோடு
உயிர் தந்தவனும்
இல்லை உயிரோடு
உடன் பிறந்தவர்
என் தொலைவோடு
உறவினரும் இல்லை
பரிவோடு
உறவுகள் நிரந்தரம் இல்லை
என்னோடு
நிலைப்பவரும் விலகிவிடுவர்
புண்ணோடு
நிலைத்து நிற்பவர்
நின்றுவிடுவர் இடையோடு
தனிமையில் இன்று நான்
தெருவோடு .......