ஆறடி மண்

ஆடை ,அலங்காரங்கள்,
அரு மருந்து ,வாசனைத் திரவியங்கள் ,
அத்தனையும் எதற்கு ?

மேடையிலே, எதுகை, மோனையோடு
ஒன்றுக்கும், உதவாத ,உண்மைக்கு, மாறான
பேச்சும் எதற்கு ?

கூட்டாக நண்பர்கள் கூடியிருந்து,
கும்மாளம் போடுவதும் எதற்கு ?

கட்டுக் கட்டாக பணம் காட்டி
பகட்டாக வாழ்வதும் எதற்கு ?

ஒரு ஜான் வயிற்றிற்கு ,
இரு கை விரல்களும் ,
வாய் ஜால வார்த்தைகளும் ,
செய்யும் வித்தைகளும் எதற்கு ?

கடைசியில்,
ஆறடி மண்ணும்
அருகிருந்து உன்னோடு
உடன் வாராது காண் .

எழுதியவர் : arsm1952 (30-Apr-14, 8:42 pm)
Tanglish : aaradi man
பார்வை : 240

மேலே