மே தினம்

மேன்மையுரச் செய்திடவே தொழிலாளர் வாழ்க்கையினை
மேதினியில் ஒரு தினம்-மேதினம்!

கடினமாக உழைத்திடும் உழைப்பாளர் வாழ்க்கையினை
களிப்புறச் செய்திடவே ஒரு தினம்-மேதினம்!

சட்டங்கள் பல இயற்றிடவே சங்கங்கள் பல அமைத்திடவே
சங்கமித்த ஒரு தினம்-மே தினம்!

உணவு உடை உரையுள்ளாம்
உலகத்தின் அடிப்படைத் தேவைகளாம்!

இவையனைத்தும் தந்து விட்டால்
இன்புறுவான் தொழிலாளி!

நச்சு வாயுத் தாக்காமல் ஏணிப்படிகள் உடையாமல்
சாரம் எதுவும் சாயாமல் மணல் எதுவும் சரியாமல்

வசதியனைத்தும் செய்து தந்தால்
வசந்தமது வீசிடுமே தொழிலாளர் வாழ்க்கையிலே!

தொழிலாளர் நலன் காத்திடுவோம்
தொழில்கள் பல வளர்த்திடுவோம்!

எழுதியவர் : திலகா (30-Apr-14, 8:05 pm)
சேர்த்தது : திலகா
பார்வை : 392

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே