எம் தினம் இத்தினம் மே தினம்

தினம் பல
அதில் சில
சிறந்திட
மனம் பல
கொண்டாடிட
மே அது
தனித்திட
தொழிலாளர் மகிழ்ந்திட
வந்தது முதல் தினம்!!

தொழில் பல
செய்திடும்
உண்மையாய்
உழைத்திடும்
உழைப்பாளர்
தினமிது!!

சிறு தொழில்
பெருந் தொழில்
செய்திடும்
எல்லாருமாய்
ஒற்றுமையாய்
ஊர்வலமாய்
சென்றிடும் ஓர் தினம்!!

கவலை மறந்திட
இத்தினம் வந்திட
பெருமையாய்
எங்கள் தினம்
என்றுரைத்து
சிரித்து
மகிழ்ந்திடும் ஓர் தினம்!

சர்வதேசமும்
சேர்ந்திருந்து
பண்டிகையாய்
எங்கள் தினம்
கொண்டாடும்
ஓர் தினம்
இம் மேதினம்!!

ஜவ்ஹர்
(இத்தினம் என் பிறந்த தினம்)

எழுதியவர் : ஜவ்ஹர் (30-Apr-14, 10:07 pm)
பார்வை : 157

மேலே