இன்று கொண்டாடும் நாளில்லை

இன்று கொண்டாடும் நாளில்லை ...
தொழிலாளர்களின் திண்டாட்டத்தை ..
உலகறிய வைத்த நாள் ....!!!

தொழிலாளியை இயந்திரம் போல்....
பலமணிநேரம் வேலை வாங்கிய ...
முதலாளிகக்குக்கு எதிராக
போராடிய நாள் ....!!!

தொழிலாளி ஒரு அடிமையில்லை
அது ஒரு உணர்வுள்ள பந்த பாசம்
உள்ள உயிர் ஜீவன் என்பதை
சோசலிச வாதிகளால் உலக்குக்கு
உணர்த்திய உணர்வு பூர்வ நாள் ...!!!

இன்று தொழிலாளர்களுக்கு
முதலாளி வர்க்கம் ஓரளவேனும்
சலுகையை கொடுக்க வேண்டும்
என்பதை சிந்திக்க வைத்த நாள்
சலுகைகள் கிடைக்கவும் வைத்த நாள் ..!!!

எங்கையா தொழிலாளருக்கு சலுகை
கிடைத்தது என்று கேட்கும் உறவுகளே
மேதின புரட்சிக்கு முன் தொழிலாளர்
சுரண்டலை பாருங்கள் நாம் பெற்ற
சலுகைகள் புரியும் .....!!!

சப்பாத்து இல்லையே என்று
கவலை படாதே - கால் இருக்கு
என்று சந்தோசப்படு என்பது போல்
கிடைத்த சலுகையை மதிப்போம்
மேலும் கிடைக்க போராடுவோம் ....!!!

இன்றைய தினத்தில் அரசியல்
கூட்டங்களும் பொறிபறக்கும்
பேச்சுக்களும் இல்லை தொழிலாளர்
தேவை - பெற்றதை இழக்காமலும்
பெற வேண்டியதை பெற்றுக்கொடுப்பதும்
சமூக பற்றுள்ள அரசியல் வாதிகளின்
தலையாய கடமை ....!!!

ஆதலால் அரசியல் வாதிகள் ...
முதலாளி வர்க்கங்கள் ..
தொழிலாளர்கள் எவருமே ..
கொண்டாடும் நாளில்லை இது ..
தொழிலாளர்களின் திண்டாட்டத்தை
தீர்த்து வைக்க போராடும் நாள் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (1-May-14, 7:57 am)
பார்வை : 193

மேலே