வண்டுகள் கவிதை

*
இல்லாமல் இல்லை இங்கு
இருப்பது எல்லாமே.
*
ஊதுபத்தி நறுமணம்
நுகருமா துளசிச் செடிகள்?.
*
வண்டைத் துரத்துகிறது வண்டு
பூக்களுக்குச் சிரிப்பு..
*
கூப்பிட்டவுடன் வந்து
அருகில் நின்றது நாய்க்குட்டி
*
பகலில் வழி தெரியாமல்
அலைகின்றன பன்றிகள்.
***

எழுதியவர் : ந.க.துறைவன் (1-May-14, 12:16 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 86

மேலே