புலம்பல்

ஒரு மாணவன் குமுறுகிறான்:

எதிலும் நாட்டமில்லை
ஏனோ மனவருத்தம்
எதனில் நிலைத்திருப்பேன்
எதுவும் பிடிக்கவில்லை
எதையோ நினைத்துக்கொண்டு - மனம்
எங்கோ அலைகிறது

கனிய காத்திருந்தால்
கவலை சூழ்கிறது
விதியை நினைத்திருந்தால் - விடை
எதுவோ கிடைக்கிறது
எதுவோ என்வாழ்க்கை - பயிர்
அதுவே இல்வாழ்க்கை - என
பலபேர் சொல் கேட்டு - மனம்
மேலும் குழம்பியது

வாழ வழியிருக்கு
வாழ விருப்பம் இல்லை
மதியாய் படைத்ததனால்
மனம் மடிய மறுக்கிறது
மடிய வைத்துவிட்டால்
உயிர் ஓடிய நோகிறது
ஒதுங்கி வாழ்ந்துவிட்டேன் - மதி
ஊனம் ஆனதுபோல்
ஒதுங்கி வாழ்ந்தாலும் - மனம்
உயர நினைக்கிறது
கட்டுப்படுத்திக்கொண்டு
கண்நீர்வடித்துக்கொண்டு
காலம் தள்ளுகிறேன்
பெற்றோர் சொல்கேட்டு
வாழ்க்கை இதுவென்று

என் மனதை பூட்டிவிட்டு
வழியை மாற்றிவிட்டு - ஏனோ
என் வாழ்வில் விளையாட்டு ?

எழுதியவர் : மா.காளிதாஸ் (1-May-14, 12:33 pm)
Tanglish : pulambal
பார்வை : 469

மேலே