வெடித்த குண்டு, வெடிக்காத மக்கள்
எவர் ஆண்டாலும்
எவர் ஆளவந்தாலும்
தீவிரவாத வெடிக்குண்டு
திரி நாக்குகளின்
தீண்டல் தீயில்
ஏதுமறியா
குப்பனும் சுப்பனும்
பலிக்கடா ஆவது
தொடர்கதையாகிறது.
அடே தீவிரவாத கொம்பனே...!!
யாரை எச்சரிக்க
எங்கே வைக்கிறாய்?
எந்த கோரிக்கை அரிப்புக்கு
எங்கே வீசுகிறாய் உன்
கோழைத்தனமா குண்டுகளை..!?
தீவிரவாத பேடியே..!
உன் தாயின்
மார்புக்காம்பை
சப்பி சப்பி
தாய்ப்பால்
குடித்திருக்கமாட்டாய்
மென்று கடித்து
மார்பு சதையின்
இரத்தினை ருசித்த
வெறியனாக இருந்திருப்பாய்.
உன்னிடம் எப்படி இருக்கும்
மனிதமும் அன்பும்...?
ஏய் கொழப்பெடுத்த
தீவிரவாத பன்றிகளே...!
மதவெறி சாயங்கள் பூசி
வெடிக்குண்டுக்களை
தூக்கிக்கொண்டு
அலையும் வெறிநாய்களே..!
மதம் வளர்க்க
உரமாக்கிக்கொள்ள
மனித பிண்டங்களை
குண்டுவைத்துப் பிளக்க,
கொத்து கொத்தாய்
கொன்று கிழிக்க
எந்த மதமடா
போதித்தது...உனக்கு?
சொல்லடா காட்டேரியே...!
மனிதத்தை கொன்று
மனித சதைகளை
மென்று அலைகிற
உன்னையும்
உன் தீவரவாதத்தையும்
கண்டு மனம்வெம்பி
துடிக்கும் ஆக்ரோஷத்திலுள்ள
பாமர மக்கள்
என்றாவது ஒரு நாள்
பொறுமையிழந்தால்
பொங்கி எழுந்தால் உனை
பொசுக்கி விடத்தான் போகிறார்கள்.
அடத்தூ,,,!
குண்டு வைத்த கோழைகளே...!
இவ்வளவுதானா உங்கள் வீரம்..!
இன்னும்வேண்டுமா எங்கள் இரத்தம்..!
எங்கள் வீரத்தினை பார்க்கிறாயா...?
உன்னிடம் சில மத குண்டுகள் மட்டுந்தானே...!
எங்களிடம் பார் 140 கோடி உயிர் குண்டுகள்...!
வெடிக்க வெடிக்க பிறக்கும்
எங்கள் தேசப்பற்றும் ஒற்றுமையும்..!
-இரா.சந்தோஷ் குமார்