மனித துரோகிகளே 2
மனிதாபிமானம் மறந்த
மனித துரோகிகளே
மயானக்கொள்கையில் எதற்கு
இவ்வளவு மோகம் .......
சுதந்திர உலகை
சூழ்ச்சிகளால் வளைத்து
நகரங்களைஎல்லாம்
நரகம் ஆக்குவதில் எத்தனை வேகம் ......
இலவம் பஞ்சுபோல்
வெடித்து சிதறி
காற்றோடு கலந்துபோய் விட்டது
மனித தேகம் ......
மழை வற்றிப்போன பின்பும்
மரண வேட்டைகளால்
உதிரத்தை உறிஞ்ச
எத்தனை தாகம் .......
இன்பம் தந்த தென்றல் காற்று போய்
துன்பம் தரும்
மரண வாடையால்
உலகமெல்லாம் சோகம் .......
இன்பங்களே இல்லாமல்
துன்பங்களின் துயரத்தில்
மனித உயிர்கள் இசைக்கிறது
சோக ராகம் .......
இன்னும் ஏன் ?
ஒன்றி வாழவேண்டிய
மனித இனத்தை
உருத்தெரியாமல் உடைத்துவிட்டீர்கள்
மாறுபட்ட மதக்கொள்கைகளால் .....
இருக்கின்ற இதயங்கள்
கண்களுக்கு தெரியவில்லை
கல்லிடமும் சுவரிடமும்
கருணையை தேடுகிறாய் .........
ஆளப்பிறந்த மனித இனத்தை
ஆயுதங்கள் இறையாக்குமோ
கல்நெஞ்சம் கொண்டவரின்
கால்தடங்கள் பூமியில் தொடருமோ ......
மனித உறுப்புக்கள் என்ன
இயந்திர உதிரி பாகங்களா
நினைத்த மாத்திரத்தில்
வாங்கி மாற்றிக்கொள்ள .....
உயிரின் மதிப்பு
உங்களுக்கு எப்படி தெரியும்
இழந்தவருகளுக்கு கேளுங்கள்
இலகும் மனம் .......
மனிதனை நம்பாமல்
மரண தூதுவர்கல்தானா
உங்கள் இலக்குகளை
இட்டுசெல்ல போகிறார்கள் ......
விடிகின்ற பொழுதுகள் எல்லாம்
வெடிசத்தட் தோடுதானா விடியவேண்டும்
வேண்டாமே -
விடியல் வெளிச்சத்தை தரட்டும்
இருள் வேண்டாம் ......