நிழலுக்கு வழியில்லை

விதைபோட்டவன் ஒருத்தன்
விழிபோலே பாதுகாத்து
மரமாக்கிய ஒருத்தன் ......

உதிரத்தை நீராக்கி
உணர்வுகளை வேலியாக்கி
அன்பு அதை உரமாக்கி
ஆசையாய் வளர்த்த மரம் ......

பாதுகாப்பு வேலியிட்டு
பக்குவமாய் பாதுகாத்து
கருத்தாலே களைஎடுத்து
கண்ணுக்குள்ளே வளர்த்தமரம் ........

வேகமாய் வளர்ந்த மரம்
விண்ணை நோக்கி நிற்கையிலே
விதையிட்ட அவனை இங்கு
விதி வந்து சேர்த்திடுமோ .........

மரமான மரமதுவோ
மனசாட்சி இழந்துவிட
பொய்சாட்சி பலசொல்லி
மெய்மனதை கொன்றிடுமோ ........

உயிர்கொடுத்து வளர்த்தமரம்
ஓரம்தள்ளி ஒதுக்கிவிட
வளர்த்தமணம் இரண்டுமே
வாய் அடைத்து நின்றதிங்கே ........

நிழல்கொடுக்கும் நாளையென்று
நேசமாய் வளர்த்தமரம்
நன்றிகெட்டு நடக்கையிலே
நரகம்தான் மிட்சமிங்கே .......

நன்றிகெட்ட உலகினிலே
நல்லதெல்லாம் செத்துபோச்சு
உதவி செய்த உள்ளமெல்லாம்
உதைபட்டு உருகளாச்சு .......

வளர்புமகள் வேதனையை
சொல்லிவிட வார்த்தையில்லை
வாய்விட்டு அழுதிட்டும்
வருத்தமது போகவில்லை ........

நாளெல்லாம் யுகமாகி
நரகமே வாழ்க்கையாகி
நாளையென்னும் எதிர்காலம்
ஏளனமாய் சிரிக்குதிங்கே .......

எழுதியவர் : வினாயகமுருகன் (1-May-14, 8:26 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 85

மேலே