முத்தத்தின் மகிமை
அம்மாவின் முத்தம் அன்பு முத்தம்,
கலப்படம் அற்றது!...........
அப்பாவின் முத்தம் அதிர்ஷ்ட முத்தம்,
கேட்டாலும் கிடைக்காது!........
நண்பரின் முத்தம் ஆனந்த முத்தம்,
திடிரென்று கிடைப்பது!............
காதலன் முத்தம் ஆசை முத்தம்,
கேட்காமல் கிடைப்பது!.........
உடன் பிறந்தோர் முத்தம் கஞ்ச முத்தம்,
எளிதில் கிடைக்காது!............
முத்தமிடு அன்பினால் மட்டும்,
காமமாக மாற்றி விட வேண்டாம்!..........

