நீர் தேக்க அலை

காரிருள்
மாரியாகி
பார் போற்றும்
போர்வையாகும்

சாதி மதம் பார்ப்பதில்லை
வாதி யாவருக்கும் குனிவதில்லை
நம்பூதி மாயை செய்வதில்லை
சதி செய்வோர்க்கும் தாகம் தனிக்கமருப்பதில்லை

கள்ளனாய் அணைப்போட்டு
வெள்ளத்தை தடுக்கும் மூடரை எண்ணி
பள்ளத்தை சமன்செய்திடத் துடிக்கும்
உள்ளதை பார்த்து சிரிக்கும்

எழுதியவர் : கனகரத்தினம் (2-May-14, 10:39 pm)
பார்வை : 87

மேலே