ஆயிரம் சுகமல்லவா

இரவுக்கருமை
இறங்கித் தெறிக்க
அக்றிணைகள்
அணைக்கத் துவங்கின
தத்தம் இடங்களில்
தத்தம் நிறங்கலைந்து!!!

ஒன்றோடொன்று
ஒன்றெனக் கலந்து
பிரிக்க இயலா
பிரிதொரு இயல்பாய்

ஒளியற்று ஒன்றின
ஒலியற்று ஒன்றின
பற்றற்று ஒன்றின
பழியற்று ஒன்றின

இரவைத் தின்னும்
சூரிய வரவை
தினமும் நிகழ்த்தும்
பூமிப் பறவை
யாவும் ஒளித்திட
யாவும் ஒளிர்ந்திட

விடியல் வெளுமை
இறங்கி வெளுக்க
அக்றிணைகள்
தணிக்கத் துவங்கின
தத்தம் இடங்களில்
தத்தம் நிறங்களில்

நித்தம் சத்தமிடும்
சத்தம் சத்தமிடாமல்
நித்தம் தூசடிக்கும்
தூசு தூவியடிக்காமல்

நிசப்தம் நிரம்பிய
நிதான சாலையில்
ஆறுமணி காலையில்
அலைந்துபார்,தொலைந்துபார்

ஆயிரம் சுகமல்லவா

எழுதியவர் : சர்நா (3-May-14, 9:04 am)
பார்வை : 287

மேலே