இருந்தும் இறுதியில் அனாதையாய்
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
காடு கரையில் வேலை செஞ்சு
கல்வி அறிவு தந்தவங்க
காலமெல்லாம் கஷ்டப்பட்டும்
கண்ணீர் மட்டும் மிச்சமாச்சு
பொத்தி பொத்தி வளர்த்திடவே-தினம்
செத்து செத்து பிளைச்சாங்க
ஆறு பேர பெற்றும் கூட
ஆறுதலா யாருமில்லை
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
ஆறு பேரும் படிச்சு முடிச்சு
தேசாந்திரம் போகத் துடிச்சு
அநாதையானா கதைய கேளுங்க
அடிமை பிழைப்பாள் அவதிதானுங்க
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
அன்னையவள் நோயின் பிடியில்
அப்பனவன் வறுமைப் பிடியில்
பிள்ளையெல்லாம் அடிமை பிடியில்
மெத்தப் படிச்சும் புத்தியில்லையே
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
வந்துபார்க்க முடியாமல்
வட்டிக் கடனும் அடையாமல்
வழக்கமெல்லாம் மாறி போச்சுங்க-பெத்தவங்க
வாழ்க்கை கூட முடிஞ்சு போச்சுங்க
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
ஒப்பந்தந்தில் பிள்ளை விழ
ஒப்பாரிக்கு யாருமில்லை
ஆறு பேறு இருந்தும் கூட
ஆறுதலா யாருமில்லை
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
உள்ளுரில் பிழைக்கச் சொல்லி-தாய்
தலையால அடிச்சுகிட்டா
வெளிநாட்டு மோகத்தால
பறந்திடுச்சே பிள்ளையெல்லாம்
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
கடைசி கடனை முடிக்க முடியல
கல்லறைக்கும் சேர்க்க முடியல
கடல் கடந்து போனதால
கண்ணீர் கூட மிச்சமில்லை
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
தேசம் என்நேசமுனு பேசிப் பேசி
வெளிவேசம் போட்டுப் போட்டு
மோசம் போன கதை தானுங்க
பாசம் செத்து நாசமாச்சுங்க
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
