உன்னை காதலிக்கிறேன்

மணியிடை தொடுத்த
மல்லிகை மாலையாய்
உன் சொல்லிடை சுமந்த
புன்னகை ஒலி எனக்கு
மெல்லிசையே ..!!

உன் கண்ணிரு விழிஒளி
காதல்கண்டு தோற்ற
கதிரொளி தனித்தே சிறுத்திட
மாலை மறைய தவிப்பது
உந்தன் சாதனையோ..!!

புகழ் சூழ்ந்த அதிசயமும்
எட்டி நின்று ஏங்கிடுமே
எழில் நிறைந்த உன்மனதின்
பேரழகாய் உயிர் பெற்று
வாழ்ந்திடவே..!!

என் இதயஒலி உன்னினைவு
கொண்டு இசையாக
உணர்வுகள் ஒவ்வென்றும்
என் கவிஆளும் சுவரம்
மேவிய பரவசமே..!

ஆராரும் கண்டிராத தனிமையிலே
உன் பிரிவின் வலிகூட
துன்பம் மேவிய இன்பமான
பிரசவ உணர்வை தழுவியே
ஈரம் காயாத காயமாகிறது.!!

தூயவன் நீ இனியவனே
உன் உள்மனம் என்னை
ஆட்கொள்ள இரத்தங்கள்
என் உயிர் தாங்கி இதயத்தில்
உன் காதல் வளர்க்கிறது..!!

உன் நேசம் சுவாசமாக
என்மனதும் தினம்வாழும்
உன் தனிமை தீண்ட என்உயிர்
கனமாகி உடையும் நாளிலே
உன்அன்பால் காதல்கரை கட்டுவாயோ..!!

.....கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (3-May-14, 4:43 am)
Tanglish : unnai kathalikiren
பார்வை : 163

மேலே