வழியறியாத வலிகளோடு
தொலைவில் சென்றாலும்
தொடர்பில் இருப்போம்
என்றோம் அந்நாளிலே...
நட்பாய் நாளும்
உருகி நெகிழ்ந்தோம்
பிரியும் நாள்வரை...
கண்ணீர்க் கோலத்தில்
கலைந்த வானவில்லாய்
கவலையுடன் சென்றோம்...
நட்பை மட்டும் சேமித்து...
இன்று...
ஓராண்டு ஆகியும்
ஒரு தொடர்பும் இல்லாதோர் பலர்...
பிறந்தநாள் வாழ்த்துக்காகவாவது
ஒருமுறை அழைத்தோர் சிலர்...
பல முறை அழைத்தும்
தொடர்புகொள்ள முடியாதோர் பலர்...
வண்ணங்களாக வந்தோம்;
ஓவியமாய் சேர்ந்தோம்;
கானல் நீராய் கரைந்த்தோம்...
எதோ ஒருநாள்
மீண்டும் சந்தித்தாலும்
ஓரிரு வரிகளில்
முடிந்துவிடும் நம் நட்பு...
நம் பெண்களின் நட்பு...
வழியறியாத வலிகளோடு...
கீதா...