தீர்க்கவே முடியாதவள்

ஒரு வழியாக
கிடைத்தது
கேள்வி...

கிடைக்காமல் போன
பதிலை
கிடைத்ததாக
நினைக்கும் நகல்...

நகலைத் துளைத்து
நிஜத்தை
கழுத்தை பிடித்து
இழுக்கும்
புன்னகை.......

புன்னகை தவறுதல்
யோசனை
என்றே, தரிசனம்
தீர்க்கமாகிறது....

தீர்க்கவே முடியாதவள்
என்னவள் என்ற
ஏகாந்த சிந்தனையில்
வரைபடம்
விரியத் துவங்குகிறது.....

துவங்கிய வாசலை
ஜன்னலிலிருந்தே
தொடரும் எனது
சிறகின் காட்டுக்குள்
ஒரு வழியாக
கிடைத்தே விட்டது
கேள்வி....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (4-May-14, 10:15 am)
பார்வை : 153

மேலே