காமம்
காமத்து மரங்கள்
காய்க்க தொடங்கின
பாச மரங்கள்
காயத்தொடங்கின
ஓரப்பார்வையில் காமம்
புன்னகைத்தால் காமம்
தொட்டு பேசினால் காமம்
தொடங்குதே காமம்
எட்டு வயதில் பள்ளி காமம்
இருவது வயதில் பல்கலை காமம்
நாற்பதில் மடியும் காமம்
அறுவதில் இயலா காமம்
குழந்தையில் வீட்டில் காமம்
குமரியில் எங்கும் காமம்
வீதியில் விடாது காமம்
விடுமுறை காணா இந்த காமம்
வளர்ப்பினில் காமம்
வகுப்பினில் காமம்
தொட்டால் காமம்
விட்டால் காமம்
ஆடையில் காமம்
ஆசையில் காமம்
ஆண்ணிலும் காமம்
பெண்ணிலும் காமம்
உழைப்பிலும் காமம்
செலவிலும் காமம்
மண்ணிலும் காமம்
விண்ணிலும் காமம்
என்னிலும் காமம்
உன்னிலும் காமம்
தூய அன்பு மறந்த இந்த உலகில்
எங்கிலும் காமம்