எங்களை மன்னித்துவிடு சுவாதி

அவள் குழந்தையாக, சகோதரியாக, பேத்தியாக, தோழியாக ,காதலியாக இப்படி ஒரு செய்தியாக நம் இதயம் நோக,
அவள் பசியோடு இருந்திருப்பாளோ ?
அன்று முன் இரவில் என்ன கனவு கண்டாளோ ?
தன் தாய் தந்தைக்கும் என்ன வாங்கி வந்தாளோ ?
நீ சென்னையில் வாங்க வந்ததை விட்டு உன் உயிர் வாங்கிவிட்டார்களே !
அவள் கனவு பிளக்க, குருதி சிதற, எங்கள் நெஞ்சு சிதறியது.
நெஞ்சு பொறுக்கவில்லை உன்னை உயிரில்லா மரம் போல் பார்க்க.
எங்களால் முடிந்தது எங்கள் கண்மணியை உப்பு தண்ணீர் துளியால் ஊறவைப்போம்.
எங்களை மன்னித்துவிடு தோழியே!

அரசியல் பசிக்கு இரையானாயோ ?
முன்னால் இந்தியர்களின் சதியா ?
சென்னையில் வெயில் அதிகமென்று உன்னை குளிர் சாதனத்தில் வைக்க நினைத்த அந்த கழிவு யார் ?
நாங்கள் இன்னும் கோழைகள் தான் !
தெரிந்து உயிர் நீத்த சகோதரி செங்கொடி, சகோதரன் முத்துக்குமரனையும் மறந்தோம் நீதியும் மறந்தோம் !!
நீ அப்பாவியாக சென்றாய் உனக்கு எப்படி ???

எங்களை மன்னித்துவிடு தோழியே !!

எழுதியவர் : (4-May-14, 1:05 pm)
சேர்த்தது : pavithran
பார்வை : 103

மேலே