இறை வழி நம் வழி

இறை வழி நம் வழி !

புகழுக்கு உரியவன் இறைவன்
புகழ்ச்சியை விரும்பும் மனிதன்

அள்ளிக்கொடுப்பவன் இறைவன்
சொல்லிக்காட்டுவது மனிதன்

மாற்றத்தை தருபவன் இறைவன்
மாறு செய்பவன் மனிதன்

தோற்றத்தை தந்தான் இறைவன்
தோற்கடிக்க நினைக்கும் மனிதன்

பெற்றோர்களை தந்தான் இறைவன்
காப்பாற்ற மறந்தான் மனிதன்

சொத்தை ஆக்கி தந்தான் இறைவன்
சூழ்ச்சி செய்து வைத்தான் மனிதன்

பொறுமையை தந்தான் இறைவன்
பெருமையில் நடந்தான் மனிதன்

ஏற்றத்தை தந்தான் நம் இறைவன்
ஏளனம் செய்யும் இந்த மனிதன்

நல்ல கல்பை தந்தான் இறைவன்
கலகம் செய்வித்தான் மனிதன்

இறைவன் நினைத்தால் ஒரு நொடி
நாம் திருந்தி வாழ்வோம் மறை வழி

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (4-May-14, 12:51 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 108

மேலே