எமக்கலை
செத்த பின்னரே
கொத்தித்தின்னும்
கழுகுகள் ...
காமுகப் பசிக்கு
கழுகுப் பார்வையாலே
உயிர் உள்ளபோதே -என்
உறுப்புகளை
கொத்தித் தின்னுகிறாயே
கொலைபாதகா ?
இளம் சிறார்களை
சிதைத்துவிட்டு
இன்னல்களின்றி
இனியும் நீ
உலவலாமோ ...
என் அனுமதியின்றி
எனைத் தொடும்
எவனையும்
எமனுக்கிரையாக்க
'எமக்கலையை '
எனக்களி
என் இறைவா ..
வம்சமே கருவறுத்தபின்
வந்து தருவேன் உன்னிடம்
பத்திரமாய்..
என் சிறார்களாவது
சிறகடிக்கட்டும்
பயமகன்று ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
