குடும்பத்தின் ஒளி நீ அம்மா - சிஎம்ஜேசு
விவசாய பூமிதனில்
விதையாய் மலர்ந்து
மதியினால் குடும்ப மரமாகி
நிழலாய் ,உறவுகளின் நெஞ்சம் நிறைந்து
அன்பான வாழ்வை மலர செய்தாய் அம்மா
வாழ்வின் துன்பங்கள் களைய
உழைப்பை உன் உடனாக்கி உயர்ந்தாயம்மா
சுயநலம் மறந்து ,சுகங்கள் மறந்து
சோம்பல் சிறிதும் இல்லா உழைப்பை - உன் கலையாக்கினாய் அம்மா
குடும்பம் உயர்வானது - உன்
உள்ளம் சொன்னபடி இந்நேரம்
எங்கிருந்தோ வந்து உன்னில்
தங்கிக்கொண்ட புற்று நோய் கண்டு
கண்களை குளமாக்கி - எங்கள்
இதயத்தை ரணமாக்கியது
இடிந்து போகாது நோய் மடிய
அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டாய்
ஒன்றிணைந்து தேற்றினோம்
என்றும் நீங்கள் எங்கள் உடன் வாழ
வலி மறந்து உளம் திறந்து
உண்மை நன்மை செய்கிறீர்
எனை மறந்து உனை நினைந்து - இறை
இன்பம் வேண்டி வாழ்கிறேன்
சந்தரமண்டலம் போல ஒளிர்ந்து
நாளும் வெளிச்சமாக நீர்