வசிக்க வீடில்லா நடைபாதை வாசிகள் - நேரிசை வெண்பாக்கள் 30

தண்ணீர் இழந்து தரப்படுமீன் தத்தளிக்கும்!
கண்ணீர்க் கடலில்,எம் கைசோரும் – விண்ணதின்
மேகமாம் பெண்ணழுதால் மேதினியில் ...எங்களுக்குப்
போகயிடம் உண்டோ புகல்! 1

தண்ணீர் இழந்து தரப்படுமீன் தத்தளிக்கும்!
கண்ணீர்க் கடலில்,எம் கைசோரும்
...–பெண்ணே!காண்
கெட்டுத் தெருவில் கிடக்கின்ற பேர்களுக்குக்
கொட்டுகின்ற தேளாம் மழை! 2

தண்ணீர் இழந்து தரப்படுமீன் தத்தளிக்கும்!
கண்ணீர்க் கடலில்,எம் கைசோரும்
...– பெண்ணே!சொல்:
எங்கள் துயர்கண்டு மேகம்கண் ணீர்விடின்
தங்க இடமே(து) எமக்கு? 3

நாளெல்லாம் வேர்வைசிந்த நாங்கள் உழைப்பினும்
தோளெல்லாம் வேர்த்துத் துவளினும் - தேளெனக்
கூடும் விலைவாசி கொட்டுமே! ஊணுமே
தேடவோ நாங்கள் தினம்? 4

வெண்பாக்கள் 2, 3 நண்பர் மெய்யன் நடராஜ், பேரன் விவேக்கின் கருத்துகளுக்கேற்ப சிறுமாற்றங் களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-14, 10:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 86

மேலே