விதியின் இருப்பிடம் - நேரிசை வெண்பாக்கள் 29

மனிதனின் உள்ளத்தில் உள்ளே மறைவாய்
தனித்து அவன்விதி தங்க – இனிதாக
நற்பேறும் அங்கேயே நன்றாய் சமைந்திட
தற்பொழுது எல்லாமே நன்று!

நற்பேறு - அதிர்ஷ்டம்

தங்கும் விதியை தரணி அறியாது!
எங்கள் உயிர்த்தோழன் ஏகனுக்கும் – அங்கொரு
சுப்பனுக்கும் ஏதுமே சொல்லாது வேறெந்த
தப்பும் நடவாது தான்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-14, 8:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே