நாலாறு திங்களாய் நான்
பாலாற்றில் ஊருகின்ற தண்ணீர்போ லேமனது
வாலாட்டித் துள்ளிக்கொண் டோடுதே - வேலா!நின்
கோலால்ஏன் என்னிடையைத் தட்டினாய் உன்னினைவில்
நாலாறு திங்களாய் நான்
உச்சி நரைத்ததே ! ஊன்றி நடப்பதற்குக்
குச்சியும் தேவைப் படுகிறதே - அச்சமூட்டும்
காலாநீ வந்தென்னைக் கைப்பற்றிப் பொவாயென
நாலாறு திங்களாய் நான்
- விவேக்பாரதி
படம் : சுள்ளி