தொல்காப்பியம்

தொன்மை வாய்ந்த காப்பியம்

குறையிலா நிறைவு !

மேன்மை அடைந்த காப்பியம்

அறிவுசால் செறிவு !

நிரம்பு வளம் வரம்பிறவாமல்

வரையறுத்து வடித்த முறை வனப்பு !

மொழி வளர தளர்ச்சித்தராமல்

ஒப்புயர்வற்ற படைத்த முறை சிறப்பு !

கனலினும் -- புனலினும்

என்னற்ற நூல்கள் அழிந்துபட !

காப்பியம் -- காறும்

தொலையாதற்ற நிலவுத் தொட !

முத்தமிழுக்கே மூத்தநூல் ஓர் களஞ்சியம் !

முன்னோடி புலவர்கெல்லாம் ஓர் பொக்கிஷம் !

பழமை இலக்கிய கருத்து வரலாற்று !

புதுமை இலக்கிய உரித்து வரவேற்று !

வருங்காலத் தமிழுக்கு இது வகையூட்டும் !

காகளம் தமிழர்க்கே புது வழிகாட்டும் !

எழுதியவர் : கவிஞர் வேதா (6-May-14, 10:24 am)
சேர்த்தது : kavingharvedha
Tanglish : tholkappiyam
பார்வை : 141

மேலே