தமிழ்

நற்றமிழ் பெற்ற செந்தமிழ் செழிக்க !
பைந்தமிழ் பழக பசுந்தமிழ் பருகவே !
கன்னித்தமிழ் இயற்றிய காவியதமிழ் வளரட்டும் !
அருந்தமிழ் அழைக்க முத்தமிழ் முழங்கட்டும் !
அருகம்புல் பிறந்த முன்னே !
அருந்தமிழ் பிறந்தது கண்னே !
வித்தையாண்ட மாறன் உருவாக்கிய
நம் முச்சங்கம் !
அவையாண்ட தமிழன் தரணியாளும்
நம் தமிழ்ச்சங்கம் !