தமிழ் கிறுக்கல்

தமிழ் கிறுக்கல் !!!!!! சின்னக்குழந்தை தமிழ் கிறுக்கல் அன்னை பெயரென அழகு பெரும் வண்ணக்கவியின் தமிழ் கிறுக்கல் கவிதை எனவே பிறந்து விடும் வளர்ந்த பிள்ளை தமிழ் கிறுக்கல் மொழியின் பற்றாய் வெளியில் வரும் தளர்ந்த வயதில் தமிழ் கிறுக்கல் தத்துவங்களை உதிர்த்து விடும் காக்கும் மன்னன் தமிழ் கிறுக்கல் நாட்டில் ஆணை என்று வரும் காதலில் விழுந்தவர் தமிழ் கிறுக்கல் அன்பின் மொழியாய் விளைந்து விடும் நாளிதழ் தன்னில் தமிழ் கிறுக்கல் நாட்டின் நடப்பை கூறி வரும் அரசியல் வாதியின் தமிழ் கிறுக்கல் ஆட்சியில் மாற்றம் கொண்டு வரும் உன்னால் முடிந்தால் கிறுக்கி பார் உனக்கும் கூட கவிதை வரும் -----அருள்ஸ்ரீ

எழுதியவர் : ARULSHRI (6-May-14, 5:32 pm)
சேர்த்தது : ARULSHRI
Tanglish : thamizh kirukal
பார்வை : 78

மேலே