கிறுக்கனாகி போனதை காதலி நீயும் அறிவாயா -- இராஜ்குமார்
முத்தம் பதித்து பதித்து
ஏமாற்றம் அடைந்த
எண்ணங்களுக்கு
கிழிகிறது - என்
கன்னம் ..!!
விழி இருந்தால் விருந்தாகும்
அவள் இதழ் பதிக்கும்
அவ்வழகு ..!!
செவி இருந்தால் இசையாகும்
என் கன்னம் கிழியும்
அவ்வோசை ..!!
அவள் காதல் - என்
கன்னத்தில் கவியாய் ..!!
இதயம் எங்கும் - அவள்
இதழ் இம்சை ..!!
என்னவள் எண்ணம்
என்றும் புதுமையாய் ..!
என் நெஞ்சில் நீந்தி நிறைகிறாள்
என் மேல் அடிக்கடி சரிகிறாள் ..!!
ஏன் என கேட்டால்
முறைக்கிறாள் ...!
மீண்டும் அவளே
ரசிக்கிறாள் ....!!
எங்கள் தோழன்
ஒருவன் தூங்காமல்
அழகு காதலை
அவனிடம் கற்றேன் ...!!
அவன் காதலை
எழுத்தால் வெட்டி
என்னுள் விதைக்கிறான் ..!
வலிகளும் ரசனை
வசம் அவனிடம் ..!!
இதோ வருகிறான் - அவன்
மடி மீது எனை வைக்க - அவன்
விரல் நுனியில் - என்னவள்
காதல் பரவுது என்னெஞ்சில் .!!
காகிதம் எனும் நானும்
என்னவளாகிய எழுதுகோலும்
காதல் செய்கிறோம் ...!!
எங்கள் தோழன் எழுத்தாளன்
விரலில் சொட்டும்
தேன்மொழி வரிகளில்
கிறுக்கி கிறுக்கி தள்ளுகிறான்
காதல் அழகில் மின்னுகிறான் ..!!
மறுக்கப்பட்ட காதலையும்
மனிதமுடன் பார்க்கிறான்
சொல்ல முடியா வலிகளை
என் மேல் வரியாய் பதிக்கிறான் ...!!
உணர்வை தாங்கி வருகிறேன்
உன்னிடம் ஒன்று கேட்கிறேன்
அவன் கிறுக்கனாகி போனதை
காதலி நீயும் அறிவாயா ???
--- இராஜ்குமார்
===============================================
ஓர் காகிதம் , எழுத்தாளனிடம் காதல் கற்று கொண்டு தன் காதலை சொல்லி , அவன் காதல் எங்கே என கேட்டும் வரிகள்
===============================================