காதல் லிமரிக்கூ
மீண்டும் மீண்டும் நிலைகுலைத்து விட்டாள்
நாளும் பொழுதும் கலையிழக்க வைத்தாள்
நினைந்துருகுகிறேன்
அழுது நனைகிறேன்
என்னை வீதியோரப் பொருளாய் மாற்றிவிட்டாள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீண்டி தீண்டி சீண்டிப் பார்ப்பவளே !
தூண்டில் போட்டு காத்து நிற்பவளே !
காதல் ஏழையாக்கி
வீண் வேலையாக்கி
கச்சிதமாய் நீ காலை வாரிப் போட்டவளே !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாளும் நீ அழகாய் ஒரு நாகரிக ஆடை
புதுமை கொழிக்கும் உன் புயத்தோர ஜாடை
மயங்கிவிட்டேன் நானும்
தயங்கிக்கொண்டேன் நாளும்
நீ அடைய முடியாத அதிசயக் காடை .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~