பொறாமை
பொறாமை கொண்டேன் நான்
மனவளர்ச்சி குன்றிய ஒருவனைக் கண்டு ...!
மனமுதிர்ச்சி அடைந்ததாக எண்ணிக்கொள்ளும் என்னால்
இயலவில்லை நானாக இருக்க ...!
அவனோ இருக்கிறானே அவனாக ...!
அவன் கள்ளமற்ற சிரிப்பு கிழித்தது என் உள்ளத்தை
உண்மையானவன் அல்ல நீ என்று கூறி ...!
உண்மைதானே ...!
என் உள்ளத்தை உள்ளபடி வெளிப்படுத்த இயலாத
என்னால் எப்படி இருக்க மூடியும் உண்மையானவனாக...!
அவனோ கொட்டினான் அவன்
உள்ளத்தின் உணர்வுகளை உள்ளபடி ..!
ஆம் பிறரைப் பற்றிய
கவலையும் இல்லையே அவனுக்கு ...!
அதனால்தானோ என்னவோ
தைரியமாக சொல்கிறான்
இதுதான் நான் என்று ...!
உண்மையில் எனக்கு வருத்தமாய் இருந்தது
அவனை நினைக்கும்போது அல்ல,
என் இயலாமையை என்னும்போது ...!
பொங்கி வந்தது எனக்கு அவனை என்னும் போது
உங்களைப் போல் பரிதாபம் அல்ல
பொறாமை மட்டுமே ...!
நான் மட்டுமல்ல
பொறாமை பட்டிருப்பாள் என் அன்னையும்கூட அவன்
பூவிதழ் சிரிப்பினைப் பார்க்கும் போதெல்லாம் ...!
ஆம் எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த வரம் ?
வாழ்நாள் முழுவதும் தன் மகனை
குழந்தையாகவே பார்க்கும் இன்பம் ...!