பேரன் குறள்கள் -05===

யோரன் குறள்படித்து யோசித்தது:=[குறள் யாப்பு]

எடுத்தான் கடித்தான் எறிந்தான் எதுவும்
அடுத்தும் இலைதமிழுக்(கு) ஆம்!----------------------41

எவ்வூர் எனினும் எமது நிலப்பொருளே!
செவ்வாயில் ஏதிச் சுவை?---------------------------------42

ஏதிலான் போல,நீ ஏன்பார்ப்பாய்?, தந்தைமுகம்
மோதுதோ உங்கண்ணின் முன்!-------------------------43

கண்ணால் கடிதமிட்டுக் கால்கொலுசால் சத்தமிட்டுப்
பண்மழலை பேரனே,நீ பாடு!------------------------------44

அகழ்வாரைத் தாங்கி அழும்,நிலமும் உன்போல்
தவழ்வாரால் தான்பொறுக்கு தாம்!---------------------45

முத்த மழையோ?என் முத்தமிழோ? ஏன்,என்னை
இத்தனை குத்துகுத்து வாய்?------------------------------46

வானம் பொழிந்தென்? வறட்சி மிகுந்தென்?வா!
நானும்,நீ யும்தானே நட்பு!----------------------------------47

செம்மங் குடிபாட்டும் ஜாக்சன் நடனமும்
அம்மையுடன் கேள்,அழா து!------------------------------48

தொட்டு மகிழ்ந்திடுவீர்! தூக்கியே கொஞ்சிடுவீர்!
விட்டுப்போம் தீவிரவா தம்!--------------------------------49

பொங்கல் கிறிஸ்துமஸ் போதிப்ப(து) என்ன,சொல்!
பொங்கிப் பகிர்ந்தளிப்ப தே!---------------------------------50
===++===

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (6-May-14, 9:54 pm)
பார்வை : 84

மேலே