எங்கே போனாள் ராதா

அற்பக் காரணத்திற்காக ராதாவுடன் சண்டைபோட்டு
விட்டு, டிபன் கூடச் சாப்பிடாமல் அலுவலகம் வந்து
விட்டது ஜெகனை உறுத்திற்று.
-
மணியைப் பார்த்தான். பதினொன்று ஆகி இருந்தது .
வீட்டில் ராதா வேலகைளை முடித்து விட்டு
ஓய்வாகத்தான் இருப்பாள். போன் செய்து ‘சாரி டியர்’
என்று சொல்லி விடலாம்
-
டெலிபோனைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டு
எண்களைச் சுழற்றினான். எங்கேஜ்ட் சத்தம் கேட்டது
-
பத்து நிமிடம் கழிந்ததும் மறுபடி முயற்சிதான்.
-
எங்கேஜ்ட்.
-
சிறிது நேரம் சென்றதும் மீண்டும் முயற்சிக்க அதே
எங்கேஜ்ட் டோன்.
-
சே! ராதாவுக்கு திமிர் அதிகம்தான்.
-
மாலை வீடு திரும்பியபோது வீடு பூட்டியிருந்து.
-
வீட்டைப் பூட்டிவிட்டு எங்கே போனாள் அந்தத் திமிர்
பிடித்தவள்?
-
தன்னிடமிருதந்த சாவியால் பூட்டைத் திறத்து உள்ளே
போனான்.
-
ராதாவின் கடிதம் மேஜை மீது இருந்தது.
-
‘காலையில் நான் காரணமில்லாமல் போட்ட சண்டைக்கு
உங்களிடம் மன்னிப்பு கேட்கலாமென்று பல முறை
டெலிபோன் செய்தும் உங்களுடன் பேச முடியவிலைலை..
ஆனாலும் உங்களுக்கு அழுத்தம் அதிகம்தான்.
நான் என் அம்மா வீட்டிற்குப் போகிறேன். உங்கள் கோபம்
தீர்ந்ததும் வந்து அழைத்துப் போங்கள்.”
-
பேட்ரியட் வந்து தலையில் இறங்கியது போலிருந்தது
ஜெகனுக்கு. தான் டெலிபோன் செய்த அதே சமயத்தில்
அவளும் அவனுடன் பேச முயற்சி செய்திருக்கிறாள்.
அதனால்தான் இரண்டு பக்கமும் எங்கேஜ்டாகே
இருந்திருக்கிறது.
-
சரியான மடையன் நான். தலையில் குட்டிக்கொண்டு
ஆட்டோவை அழைத்தான். ராதாவின் அம்மா வீட்டிற்குச்
செல்ல!
-
——————————-
>இரா.கணேசன்
நன்றி: குமுதம் 1991

எழுதியவர் : முகநூல் (6-May-14, 10:59 pm)
பார்வை : 177

மேலே