என் காதல் கதை பகுதி 24

தன்னிலை மறந்து திரியும்
ஜடத்தில் ஒருவன் ஆனேன்
காதல் சிறகு ஒடுக்க
தரையில் விழுந்து போனேன் ....

அழகை பார்க்கும் காதல்
அந்தஸ்தை பார்க்கும் காதல்
என் நிலையை எடுத்துரைத்த போதும்
ஏளனமாய் பார்த்த காதல்

எனக்கு வாய்க்கும் என்று
எந்த கனவிலும் நிஜமாய்
நானும் நினைக்க வில்லை
என்ன விதியோ என் கவலை

கொடுக்கல் வாங்கல் கொண்டு
நேசிக்கும் இதயம் மறந்து
சுவாசிக்க காசு கேட்க்கும் உலகம்
என் மனநிலை நிஜமாய் ஒரு கலகம்

மரணம் கூட ஒருமுறைதான்
மறிப்பதும் ஒரு முறைதான்
சிதறி கிடப்பது எனது உயிர்தான்
காதலால் காதல் என்னும் விஷத்தால் ...இன்னும் தொடரும் என் காதல் கதை ........

எழுதியவர் : ருத்ரன் (7-May-14, 3:24 pm)
பார்வை : 59

மேலே