பூச்சரம் அணிந்த பூந்தோட்டம்

பூத்தொடுக்கும் திருமகளோ இவள்
பூரித்து மகிழும் பூமகளோ இவள் !
மலர்களை ​கோர்த்திடும் மலர்க்கொடி
மலர்ந்திட்ட வண்ணமிகு பூங்கொடி !

புன்னகை தவழ்ந்திடும் புதிய மலரிவள்
குறுநகை புரிந்திடும் குறிஞ்சி மலரிவள் !
அமர்ந்து செயலாற்றும் ஆம்பல் மலரிவள்
மிளிர்ந்திடும் முகமுள்ள அல்லி மலரிவள் !

பூச்சரம் அணிந்த பூந்தோட்டம் ஒன்றிங்கே
பூவிதழ் ஓரத்தில் பூத்திட்ட புன்முறுவலால்
யாழிசை மீட்டிடும் தேனிசைப் பொங்கிட்டு
தேமதுர சுவையாய் இதயமோ இனிக்குது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-May-14, 3:07 pm)
பார்வை : 1020

மேலே