என் பிரியமானவளே எங்கே இருகிறாய் நீ இப்போது 555

என் உயிரே...

முதல் முறை நான்
சந்தித்தேன்...

நாம் பயின்ற பள்ளியில்
தாவணியில் உன்னை கண்டேன்...

தினம் தினம் சந்தித்து
பேசி கொண்டது...

நம் விழிகள்
மட்டுமே...

நம் இதழ்கள்
இல்லையடி...

இருபாலர் பள்ளி
என்றாலும்...

நாம் பேசிக்கொள்ள
வழியில்லையடி...

நண்பர்கள் நம்முடன்
இருந்த போதும்...

நம் விழிகள்
பேசிகொண்டன...

மணித்துளிகள் பல...

ஆசிரியர் என்னை
கண்டித்தால்...

உன் விழிகளில்
கண்ணீர் மழையடி...

உன் விழிகள் கண்ட
என் விழிகளும் கலங்குமடி...

உன் விழிகளோ...

என்னை கலங்காதே
என்று சொல்லுமடி...

என் விழிகளை
பார்த்து...

கண்கள் இரண்டும் உலகை
ரசிக்கவே நினைதேனடி...

உன் போன்ற
தேவதையிடம்...

கண்களால் பேசவே
இன்று உணர்ந்தேனடி...

தினம் உன் ரெட்டை
ஜடையில்...

மல்லியும் ஒற்றை செம்பருத்தியும்
வைத்து வருவாயடி...

உன்னை ரசிக்காத
நிமிடங்களே இல்லையடி...

தினம் மாலையில்
உன் செம்பருத்தி மலரை...

என் மிதிவண்டியில்
எடுத்து வைப்பாயடி...

தினமும்
முத்தமிடுவேன்...

நீ என்று நினைத்து...

உன் மனதில்
இருந்ததும்...

என் மனதில் இருந்ததும்
ஒன்றுதானடி...

ஆண்டு தேர்வுக்காக
பேருந்தில் நாம் செல்லும் போது...

உன் இருக்கை அருகே
என்னை அழைப்பாயடி...

தினமும் உன்னருகில்
நான் வரும் வேலை...

யாரும் பார்க்காத
வண்ணம்...

உன் விரல்களோடு
என் விரல்களை கோர்பாயடி...

கூட்ட நெரிசலில்
என் விரல்களை...

உன் கன்னங்களில்
வைத்து கொள்வாயடி...

முதல்முறை
என் பெயரை...

உன் இதழ்களால்
உச்சரிதாயடி...

உன் விழிகளில்
கங்கை வெள்ளத்துடன்...

உன் விழிகள்
கலங்கினால்...

என் விழிகள் என்னை
அறியாமலே கலங்குதடி...

முதல் முறை நானும்
உச்சரித்தேன்...

உன் பெயரை...

தனிமையில் உன் பெயரை
நான் உச்சரித்தாலும்...

பெயர் சொல்லி
உன்னை அழைத்தது...

இதுதான்
முதல் முறையடி...

உயிரே நாம் சந்தித்த
இறுதி சந்திப்பு...

நம் பள்ளியின்
இறுதி நாள்தானடி...

கண்களில் கண்ணீருடன்
உன்னை வழியனுப்பினேன்...

இன்றுவரை உன்னை
சந்திக்க முயற்சித்தும்...

முடியவில்லையடி
தொலைதூரத்தில் கூட...

அன்று முதல் இன்று வரை
உனக்காக துடிகிறேனடி...

என் இதயமோ
தினம் தவிக்குதடி...

ஒருமுறையேனும் உன்னை
சந்திபேனா என்று...

இன்றுவரை துடிகிறேனடி
உன்னை காண...

உன் கங்கை வெள்ளம்
தினம் தினம் வந்து செல்லுதடி...

என் கண் முன்னே...

உயிரே என் ஜீவன்
போகுமுன்...

உன்னை நான்
சந்திபேனா தொலைவிலாவது...

நம் கண்கள்
சந்திக்க வேண்டும்...

இத்தனை ஆண்டு காலம்
நான் தேக்கி வைத்திருந்த...

என் கண்ணீர்
துளிகளை...

உனக்கு பரிசளிக்க
வேண்டும்...

என் பிரியமானவளே
எங்கே இருகிறாய்...

நீ இப்போது...

வந்துவிடுவாய என்னை
காண ஒருமுறையேனும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (8-May-14, 3:54 pm)
பார்வை : 326

மேலே