ஆயுளுக்கும்

பால்யத்தின்
உடைந்த பலூன்களோ
காதறுந்த நாய் பொம்மையோ
பறக்க விட்ட பட்டாம்பூச்சியோ
ஏற்படுத்தி விடாத
துயரத்தை
நீ அளித்து விடக் கூடும்
என்பது
நான் அறிந்தே இருந்தது
தான் ...

தொப்பலாய்
நனைத்து விட்ட மழையில்
அன்று
நான் கதறி
அழுதது
உனக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தான் ...

சுகந்தம் சுகிக்க
பூவை நசுக்கி விடும்
உன்னை
அதன் கசங்கலை
உணரச் செய்வதென்பது
சாத்தியமில்லை
தான் ...

விட்டெரிந்து
அலை இரசிக்கும்
உன்னை
கல்லின் மூச்சுத் திணறலை
சகிக்க சொல்வதில்
நியாயமில்லை
தான் ...

என்றாலும்
இன்னும்
காத்துக் கொண்டே தான்
இருக்கிறேன்
நான் ...

ஒருவேளை
அசிரத்தையாய்
நிகழ்ந்துவிடும்
இலையின்
பிய்த்தெறிதலாய்
ஆயுளுக்குமான சாபக் கேடாய்
என்றேனும்
உன் அருகாமையை
தந்துவிடக்கூடும்
நீ !!

எழுதியவர் : யுவபாரதி (8-May-14, 3:51 pm)
Tanglish : aayulukkum
பார்வை : 80

மேலே