கம்பா நதி காமாட்சி திருவந்தாதி தொடர்ச்சி -5

9)
பரிந்த்துரைக்கும் பார்வை படரும்
ஒளியாய்ப் பலம்சேர்க்கும்
,சரிந்து விழுமுன் சதிராடும்
நெஞ்சில் அமதிபூக்கும் !
வரிந்து,விரைந்து,விடைதேடும்
வாழ்வில் விளக்கைஎற்றும்
புரிந்து,அறிந்து புகுந்தோம்
அழகம்மை பொன்னடியே!
10)
பொன்னடி கண்ட புரிசடையன்
வேண்ட பணிந்த்திங்கு ,
தென்டிசை நோக்கி தெளிந்து
குறுமுனி வந்த காலை ,
அன்று அகத்தியன் ஆட
நதியாய் உதித்து வந்த ,
பண்மான் சிறப்புடை பாடலாங்
கம்பை மகிமை கண்டே !

11)
மகிமை உணர்ந்து , மணக்கோலம்
காண விழைந்தார்க்கு ,
இகிதம் இழைய எழுந்த நல்
பாதாள வாகினியாய் ,
முகிழ்த்த முதலோன் முறைசெய்
விசுவே சலிங்கனையும் ,
* வகித்து வணங்கும் வரத்தை
வளர்த்த மலர்க்குழலே !
* வகித்து - தாங்கி (உ -ம் தலைமை தாங்கி

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (8-May-14, 5:04 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 74

மேலே