என்னவனுடன் திருமணம் இன்று

இன்று என்னவனுடன் திருமணம் எனக்கு...

நான்கு வருட கனவு என் கண்ணாளன் கை கோர்க்க

மணமகள் அலங்காரம் முடித்து கண் எல்லாம் கனவுகளோடு காஞ்சீபுரம் பட்டில் காத்திருக்க,

என் காதலன் கணவனாக பொறுபேற்க காத்திருக்க

என்னவனின் அருகில்,

உறவினர் புடை சூழ தினமும் பார்க்கும் அவரை பார்க்க ஏனோ வெட்கம்

தஞ்சாவூர் மேளமும் , செட்டிநாடு சமையலும் , உறவினர் சலப்பும் என்னை சுற்றி , ஆனால் என் மனம் அவன் சுற்றி,

ஒவ்வோர் நொடியும் ஆனந்த தாண்டவம் என் மனதில்

காத்திருந்த அந்த நொடி வந்தது

கெட்டி மேளம் முழங்க , பெற்றோரும் உற்றாரும் ஆசிர்வதிக்க, மங்கள நாதம் வசிக்க ,
என்னவன் என்னை தீண்டி , மஞ்சள் தாலி கட்டி , முன் நெற்றியில் திலகமிட்டு என்னை அவன் உரிமை ஆக்கினான்.

பிறந்த பலனை அடைந்தேன்.

இன்று முதல் செல்வியில் இருந்து திருமதியாக பதவி ஏற்கிறேன்.

அனைவரின் வாழ்த்துகளுடன்....

எழுதியவர் : திலோ (8-May-14, 8:41 pm)
பார்வை : 113

மேலே