குறிஞ்சி வாழ்க்கை

வான் வள்ளல் (கோ)கொடை
கோன் வள்ளலான் வரை
மானக் குருசில் கோனைப்
பரிசு கொள்ளல் வரை
மயங்கியே மாரியும் சொரிந்து
முழங்கின சேறேல்லாம் அழகாய்
நனைந்திட புறப்பட்டதே புனல் ...!
தானக் களிறு எதிர்த்தே -கொலை
ஏனக் களிறு(பன்றி) வதைத்திட
தழையும் உகுந்திட உந்திப் பசுங்
கழையும் சிந்திட நுழைந்தன புனல்...!
கானக் குளவி(மல்லிகை) அலைபாய மது
பானக் குளவி நெளிந்து உதிர்த்து
காடு சாதி வேரில் புகுந்து குறம்
மெட்டு சாதி ஊரில் நுழைந்தே...!
சேனை புரவி(குதிரை) அழகன் மரு
கோனர்களெல்லாம் அழகுடன் பூந்
திணை வனம் புகுந்தே பாலை
ஆக்கின வனத்தை முட்டி மோதியே புனல் ...!