தமிழே தலை வணங்கா
சின்னச் சிறு நரகம்
சிங்காரப் பெருநகரம்
வங்க கடலோரம்
வந்து செல்லும் அலைபோலே...!
மக்கள் கூட்டம் தினம் கூடி
மாக்களாக நடக்கும் செயலால்
சொல்லமுயலா தொல்லையப்பா
செல்லரிக்கும் செயலாலே... !
சென்னையெல்லாம் நாற்றமப்பா
செந்தமிழின் தலைநகர்
தொல்பெருமை கொண்டமொழி
கண்ட மொழி பேசிப்பேசி
காணவில்லை எவ்வழியும்...!!
ஆட்சிமொழி தமிழானாலும்
மாட்சி வந்து வீழ்ந்ததேனோ?!!
உலகத்தார் யாவருமே
தாய்மொழியை பின்பற்ற...!
தமிழினமோ பிறர்
மொழியை போற்றி! போற்றி
நன்னீர் நதியெல்லாம்
நாற்றமாய் நகர்வது காண்!!
நகரமதில் மாநகர்
நரகமான பெருநகர் !
யார்வந்து கெடுத்தாரென
யாவரைதான் கேட்ப்போமினி!!
எத்தனையோ தொல்லைகளை
பொறுத்தால் கூட
பெற்றவளை அழிக்கும் பிள்ளை கண்டு
பேணிக்காத்திடவும் துடிப்பவர்கள்
இங்கிருப்பது கண்டு...!
பேரலை துடித்து
கரை கடந்திடும் முன்
கவர்ந்திடு தமிழை-கடல்
கவிழ்த்திடும் முன் !!