எனக்குள் தமிழன்பன் வரிகளும் =இமாம் =

இலக்கணம் சிரிக்கிறது
இதைகணம் உணர்ந்திடு !
மறைகுணம் போக்கிப்படி !
இலக்கணம் நீக்கிப்படி !
எதுகை மோனை எதற்கு?
மின்னலை
பூட்டி வைக்கவா
சட்டி பானை ?
என்றான் மகாகவி தமிழன்பன்
இலக்கணம் எதற்கு ?
தலைக்கனம் கொண்டு
வெடித்துச் சிதரவா
இந்த வேடிக்கை ?
என்கிறான் இளங்கவி அழகன் .
தொல்காப்பியம் எம்மைப் பார்த்து
சிரிக்கிறது .
புதிய ஏற்பாடானேன் என்று
நாம் தொல்காப்பியம் பார்த்து
மலைத்துக் கொள்கிறோம்
தொலைந்து நிற்கிறோம் .
முகவரி கையில் உண்டு
நகல் வரியைத் தேடி
அலைகிறோம் .
வழி வழியாக இலக்கணம்
மாறி வர
பித்துப் பிடித்து
வாய் வழியாக
வண்டவாளம் செய்கிறோம் .
சிப்பியும் முத்தும்
இருந்தால்
முத்து முக்கியத்துவம் பெரும்
சிப்பி தேவையைப் பொறுத்தது .
தேவையில்லையா வீசி விடு !
எத்தனை சொற்கள் எம்மிடம் உண்டு
தெரியாத
ஒற்றைச் சொல்லுக்கான
உன் விவாதத்தால்
மற்றைய சொற்கள் ஊடல் கொள்ளாத என்ன ?
இலக்கணம் சோற்றுக்கான உப்பு தானே
இல்லாவிட்டால் சப்பாகும்!!
கூடிவிட்டால் தப்பாகும் !!
இலக்கணத்தை விவாதிப்பதை விடு !
உன்
ஒற்றை வரிச் சொல்லின்
அழகினில்
இலக்கணம் தோற்று
புள்ளி உனக்கானதாக எழுதப் படும் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன் இமாம் .