உன்னை பார்த்த முதல் நொடியில்

கண்டதும் காதல் ஆனாலும்
உன் கண்ணை எதிர்கொள்ள
தேவயுர்றதோ ஓராண்டு!

பார்த்ததும் பிடித்து போனாலும்
உன்முன் துணிந்து நிற்க
ஆனதோ மாதம் ஈராறு

உன்னை பார்த்த முதல் நொடியில்
சுவாசம் இழந்தேன் என்?
உன்னை பார்த்த முதல் நொடியில்
இவ்வுலகம் மறந்தேன் என்?

பழகப் பழக பாலும் புளிக்கும்
சொல்லி திரிந்தேன்
உன்னை பார்க்கும் வரைக்கும்

பிடித்த பொருளை
அழுது வேண்டும்
குழந்தையின் மனம் புரிந்தது

உன்னை பார்த்த முதல் நொடியில்
என் மனதை தொலைத்தேன் என்?
உன்னை பார்த்த முதல் நொடியில்
குழம்பி தவித்தேன் ஏன்?

எழுதியவர் : (9-May-14, 4:10 pm)
பார்வை : 600

சிறந்த கவிதைகள்

மேலே