mounam
உனை பார்த்த உடன் சங்கீதமாய்
அமர்கிறதே உதட்டில்
உன்னுயிர் சுமக்கும் போது சுகமாய்
ருசிக்கிறதே கருத்தில்
உன்நினைவு உதிக்கும் போது அரும்பாய்
மலர்கிறதே உள்ளத்தில்
உன் எண்ணம் வரும் போது அமைதியாய்
ஆட்கொள்கிறதே மனதில்
உன் மகிழ்ச்சி அறியும் போது ஆனந்தமாய்
பொங்குகிறதே கண்களில்
உன்வார்த்தை இல்லாத போது வருத்தமாய்
உறைகிறதே மனதில்
உன்னால் ஏமாற்றமடையும் போது பாரமாய்
கனக்கிறதே இதயத்தில்
உன் சோகம் உணரும் போது சுமையாய்
அழுத்துகிறதே சுவாசத்தில்
உன் கோபம் தகிக்கும் போது மலராய்
உதிர்கிறதே கலக்கத்தில்
உன் பிரிவு உருக்கும் போது ஏக்கமாய்
நிறைகிறதே உயிரில் - மௌனம்