பேரர்களுக்காக
சிறந்தவரன் பில்யவரெ னில்பே ரரென
திறந்து உரைப்பேன் மனம் . (1)
நையாண்டி நக்கல் இழைந்தே கலந்தோடும்
பையனிவன் பேச்சில் சுவை . (2)
சிறுவ ரெனினும் சிலநேரம் பேசயில்
சிந்திக்க வைப்பர் உணர்ந்து . (3)
அடித்துக்கொண் டாலும் நொடிக்குள் மறந்து
கூடிக் களிப்பர் மகிழ்ந்து . (4)
சுட்டிதா னானாலும் சேட்டையே செய்தாலும்
கட்டிக் கரும்பாய் உணர் . (5)
சூரர் படிப்பி லிருவரும், வாழிய
பேரரென போற்று முளம் . (6)
தந்தைதாய்ப் போற்றிடுவார் தட்டியுங் கேட்டிடுவார்
விந்தையாய் எண்ணும் மனம் . (7)
விளையாட்டும் வீரமும் கண்ணெனக் கொள்வார்
களைகூட் டும்முகங் காண் . (8)
சேர்ந்து சிரித்து கதைத்து மகிழ்வார்
சோர்ந்து விடாது நட்பு . (9)
அடங்குவார் அன்பினால் பேரரும்அன்றியும்
அடக்கிட மடங்கா தவர் . (10)